வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி பலி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 October 2022

வாணியம்பாடி அருகே புல்லூர் தடுப்பணையில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி பலி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் ஆந்திரா அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள தடுப்பணை பகுதியில் வாணியம்பாடி நியூடவுன் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதி சேர்ந்த இலியாஸ் அஹமத்(45), உஜேர் பாஷா(Uzair Basha)(17), உவேஸ் அஹமத்(16), ராகில் பயஸ்(22) ஆகிய 4 பேர் சுற்றுலா சென்றுள்ளனர்.


அப்போது தடை செய்யப்பட்ட தடுப்பணை பகுதியை கடந்து நால்வரும் வனப்பகுதிக்குள் குளிக்கச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் ஆற்றில் இறங்கிய போது கால் வலுக்கியதால் உஜேர் பாஷா, நீரில் விழுந்து மூழ்கியுள்ளார். இதனை தொடர்ந்து இலியாஸ் அஹமத் நீரில் குதித்து அவரை காப்பாற்ற முயன்ற போது அவரும் நீரில் மூழ்கி உள்ளார்.

உடன் வந்த இருவர் கண்முன்னே நீரில் மூழ்கியதை பார்த்த மற்ற இருவரும் செய்வதறியாது திகைத்து கூச்சலிட்டுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் உடனடியாக தமிழக மற்றும் ஆந்திர காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த இரு மாநில போலீசார் பகுதி மக்களுடன் இணைந்து நீரில் மூழ்கிய உஜேர் பாஷா மற்றும் இலியாஸ் அஹமத் ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு இருவருமே சடலமாக மீட்கப்பட்டது. 


குப்பம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/