திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார் பதிவாளராக யஹியா கான் இரண்டு தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுள்ளார். இவர் பத்திரப்பதிவு செய்த பின்னர் உரிமையாளர்களுக்கு பத்திரங்கள் உரிய நேரத்தில் வழங்குவதில்லை, பத்திரங்களை பதிவு செய்வதில் மிகவும் காலத்தாமகப்படுத்துவதாகவும் இதனால் பத்திர பதிவுகள் நடைபெறாமல் காலம் கடந்து செல்வதால் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் இடைத்தருகர்கள் சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர் பின்னர் சார் பதிவாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சார் பதிவாளர் இனி கால தாமதம் ஏற்படாது வாரு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இது குறித்து சார் பதிவாளரிடம் கேட்ட போது நான் பணியிட மாறுதல் பெற்று வாணியம்பாடிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் வந்துள்ளேன. இனி இதுபோன்று தாமதம் நடக்காது என்று பதிலளித்தார்.
No comments:
Post a Comment