கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் உமாபாய் சிவாஜகணேசன் தலைமை வகித்தார். மன்றத் துணைத் தலைவர் கயாஸ் அஹமத், ஆணையாளர் மாரிசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சங்கர் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் வார்டு குழு மற்றும் பகுதி சபா களுக்கு வார்டு கமிட்டி செயலாளர்களும், பகுதி சபா செயலாளர் என 36 பேர் நியமனம் செய்யப்பட்டது. மேலும் பகுதி சபா குழு உறுப்பினர்களுக்கான ஒவ்வொரு வார்டுகளிலும் 4 பேர்களை தேர்வு செய்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் வி.எஸ்.சாரதி குமார், சித்ரா தென்னரசு, மா.பா.சாரதி, அருள், ரஜினி, ஷாஹீன் பேகம் சலீம், தவுலத், மெஹபூபுன்னிசா, நாசீர் கான், பஷீர் அஹமத், கலீம் பாஷா, பி.முஹம்மத் அனீஸ், சாந்தி பாபு, பிரகாஷ், ஆஷா பிரியா குபேந்திரன், பத்மாவதி, சி.முஹம்மத் நோமான், கலைச்செல்வன், நுஸ்ரதுன் நிசா, ஹபீப் தங்கள், நசீமுண்ணிசா, நபீலா வகீல் உட்பட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி மேலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.
தொடர்ந்து நகராட்சி அலுவலக வளாகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மற்றும் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் நகர மன்ற தலைவர் உமா பாய் சிவாஜி கணேசன் ஆணையாளர் மாரி செல்வி, நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment