வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான இறகுப்பந்து மற்றும் மேசைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட அளவிலான இரட்டையர் பிரிவு இறகுப்பந்து மற்றும்மேசை பந்து போட்டிகள் ஜோலார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்று விளையாடினர். இதில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இறகுப்பந்து மற்றும் மேசைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் எம்.செந்தில்குமார், பள்ளி இயக்குனர் ஷபானா பேகம், பள்ளி முதல்வர் பரிதா, உடற்கல்வி ஆசிரியர் ராம்குமார் மற்றும் ஆசிரியைகள் பாராட்டினர்.
No comments:
Post a Comment