திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சி காவல் நிலையம் பின்புறம் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் மாணவ மாணவியர் கலந்து கொண்ட தமிழக அரசின் பள்ளிகல்வி துறையின் சார்பில் நடைபெற்ற பாரத எழுத்தறிவு திட்டம் 2020-2027 விழிப்புணர் பேரணியானது நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோ, பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் திலகவதி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. அங்கயர்கண்ணி தலைமையிலும் நாட்றம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி வரவேற்பிலும் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மற்றும் நாட்டறம்பள்ளி ஒன்றிய திமுக செயலாளர் சூரியகுமார், கலந்து கொண்டு சிறப்பித்தார், நிகழ்வில் ஒன்றிய திமுக நிர்வாகிகள், பேரூராட்சி நிர்வாகிகள், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment