நிம்மியம்பட்டு கிராமத்தில் மயில் திருவிழாவையொட்டி நடைப்பெற்ற 157 ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 January 2023

நிம்மியம்பட்டு கிராமத்தில் மயில் திருவிழாவையொட்டி நடைப்பெற்ற 157 ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா.


வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் மயில் திருவிழாவையொட்டி நடைப்பெற்ற 157 ஆம் ஆண்டு  மாபெரும் எருது விடும் விழா 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு.

வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் மயில் திருவிழாவை முன்னிட்டு 157ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா இன்று நடைப்பெற்றது.. இவ்விழாவில், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, குப்பம், மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து  250 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.


இவ்விழாவை வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் பிரேமலதா தலைமையில் உறுதி மொழியேற்று எருது விடும் விழாவை கொடியசைத்து துவக்கி வைத்தார் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் இதனை தொடர்ந்து  கால்நடை மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, இதில் குறிப்பிட்ட எல்லையை மணிதுளிகள் கடக்கும் காளையிற்கு முதல் பரிசாக 11111 ரூபாயும், இரண்டாவது பரிசாக 80000 ரூபாயும், மூன்றாவது பரிசாக 60000 ரூபாய் என 40 பரிசுகள் வழங்கப்பட்டன.


மேலும் இந்த எருது விடும் விழாவில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோகன்.அண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad

*/