ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று 74 ஆம் ஆண்டு குடியரசு தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 26 January 2023

ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று 74 ஆம் ஆண்டு குடியரசு தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்  இன்று 74 ஆம் ஆண்டு குடியரசு தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது, அது சமயம்மாணவர்கள் தலைமையாசிரியர்  நல்லாசிரியர் இந்திரா அவர்கள் அனைத்து மாணவர்களுக்கும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் முக கவசமும் காந்தியடிகள் நேரு ஜான்சி ராணி அன்னை தெரசா அவ்வையார் காமராசர் போன்றவர்களின் வேடமிட்டும் செம்மொழியான தமிழ் மொழி தமிழ் எங்கள் உயிர் மூச்சு போன்ற பாடல்களும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வசனங்களும் நாடகங்களும் நடத்தப்பட்டது.

இதில் மாணவர்களும் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர், சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன், மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் அண்ணாமலை, நரசிம்மன், சேர்மன் முருகேசன், முன்னாள் சேர்மன் ராஜமாணிக்கம், சம்பத் எஸ்எம்சி, தலைவர் கல்வி குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.


விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ராணுவ வீரர்  தட்டுகளை வழங்கினார் தலைமையாசிரியர் உதவி ஆசிரியர் உமாராணி தற்காலிக ஆசிரியர் சரளா சத்துணவு ஊழியர்கள் முபினா சரளா ஆகியோர் கலந்து கொண்டனர், கலந்து கொண்ட அனைவருக்கும் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் இந்திரா அவர்கள் லட்டு ஜாங்கிரி சாக்லேட் போன்ற இனிப்புகள் வழங்கியும் பெற்றோர்கள் அனைவருக்கும் தேநீர் கொடுத்து விழா சிறப்பாக முடிவடைந்தது.


இதன் நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்று வைக்கப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad