74வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 26 January 2023

74வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.


திருப்பத்தூர்  மாவட்ட ஆயுதப்படை  மைதானத்தில் நடைபெற்ற 74வது குடியரசு தின விழாவில்  மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தேசிய கொடியை ஏற்றிவைத்து  மரியாதை செலுத்தினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்காவது முறையாக  ஜோலையார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இந்திய நாட்டின் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா அவர்கள் தேசிய  கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


பின்னர் காவல் துறையினரின் சிறப்பான அணிவகுப்பை மரியாதையை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்..


இவ்விழாவில் கமோன்டோ படையினரின் வீரதீர செயல் சாகாச நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. பின்பு மாவட்ட சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய 21நபர்களுக்கு முதல்வர் விருது மற்றும் 10நபர்களுக்கு சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசின் சார்பில் 129 பயணிகளுக்கு 1கோடியே 44லட்சத்து 31ஆயிரத்து 418ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad