வெலக்கல்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் சுமார் 8,50,000 ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நல திட்டங்கள் வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 26 January 2023

வெலக்கல்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் சுமார் 8,50,000 ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நல திட்டங்கள் வழங்கப்பட்டது.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட வெலக்கல் நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து வெலக்கல் நத்தம் மற்றும் பயணபள்ளி பகுதியிலிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, தையல் இயந்திரம், கைப்பேசி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்காக பெறப்பட்ட 89 மனுக்களில் 87 மனுக்கள் ஏற்கப்பட்டு 1,32,000 ரூபாய் மதிப்பீட்டில்  முதியோர் உதவித் தொகை 72,000 ரூபாய் மதிப்பீட்டில் விதவை உதவித்தொகை என பல்வேறு நல திட்டத்தின் மூலம் மொத்தம் 8,37,490 ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. 


இந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சூரியகுமார் ஜோலார்பேட்டை  ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ்குமார் வட்டாட்சியர் குமார் தனி வட்டாட்சியர் சுமதி ஊராட்சி மன்ற தலைவர் ராமன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்


- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad