அதில் முக்கிய கோரிக்கைகளாக அனைத்து தொழிலாளர்களுக்கும் 21,000 குறைவில்லாத மாத ஊதியம் வழங்கிட வேண்டும், நடைபாதை வியாபாரிகளுக்கு நகராட்சி மூலம் ஸ்மார்ட் கார்டு மற்றும் வங்கி கடன் உதவி வழங்கிட வேண்டும், பெண்களுக்கு 55 வயதில் ஓய்வு ஊதியம் வழங்கிட வேண்டும்.

இபிஎஸ் நல வாரியம் உள்ளிட்ட அனைத்திலும் 6000 மாத ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 150க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் வழியாக வாணியம்பாடி செல்லும் இரு வழி சாலைகளிலும் AITUC சங்கத்தினர் காலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment