நத்தம் ஊராட்சி மன்ற செயலக கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 January 2023

நத்தம் ஊராட்சி மன்ற செயலக கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட கந்திலி ஒன்றியம் நத்தம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (MGNREGS) மற்றும் 15வது நிதிக்குழு நிதியிலிருந்து சுமார் 42,65,000 மதிப்பீட்டில் நத்தம் ஊராட்சி மன்ற செயலக கட்டிடம் (ஊராட்சி மன்ற கட்டிடம்)அமைக்க திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு ராஜமாணிக்கம் அவர்கள், கந்திலி ஒன்றிய செயலாளர் கே முருகேசன் மற்றும் கே எ மோகன்ராஜ், மாவட்ட கவுன்சிலர் சி கே சுப்பிரமணி, கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் மற்றும் துணைத் தலைவர் மோகன் குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சர்க்கரை, நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் மாவட்ட பிரதிநிதிகள் கருணாநிதி, சக்கரவர்த்தி, முன்னாள் இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் சம்பத் மற்றும்  முருகேசன், மகேந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள், துணைத் தலைவர், பொதுமக்கள், கழகத் தோழர்கள் என அனைவரும் கலந்து கொண்ட நிகழ்வில் இறுதியாக அன்பு அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/