தமிழ் நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிதண்ணீர் மேல்நிலைத்தொட்டியில் மலத்தை கலந்த சாதி வெறியர்களை கண்டித்தும் இவர்களை கைது செய்யாத காவல்துறை அதிகாரிகளை கண்டித்து இன்று திருப்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, மாவட்ட துணைச் செயலாளர் கலாசண்முகம் மற்றும் ஒன்றியம் நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை.

No comments:
Post a Comment