திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன பேரம் பட்டு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சுமார் 5 லட்சம் மதிப்பீட்டில் சின்ன பேராம்பட்டு பகுதி நேர கூட்டுறவு நியாய விலை கடை கட்டிடம் கட்டப்பட்டு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் புதிய பகுதி நேர நியாய விலை கடையில் சின்ன பேராம்பட்டு ஊர் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பிற்கான டோக்கனை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.
உடன் பேராம்பட்டு கூட்டுறவு கடன் சங்க தலைவர் குலோத்துங்கன்,கந்திலி ஒன்றிய பொறுப்பாளர் மோகன்ராஜ்,சின்னாரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முருகன், மற்றும் கட்சி தொண்டர்கள் என ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை
No comments:
Post a Comment