சாலையை கடக்க முயன்ற 3 ஆம் வகுப்பு மாணவன் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் மாணவன் உயிரிழப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 January 2023

சாலையை கடக்க முயன்ற 3 ஆம் வகுப்பு மாணவன் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் மாணவன் உயிரிழப்பு.


வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் சாலையை கடக்க முயன்ற 3 ஆம் வகுப்பு மாணவன் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதிய விபத்தில் மாணவன் உயிரிழப்பு. தனியார் பேருந்தின் ஓட்டுநரை தாக்கி பேருந்தின்  கண்ணாடியை உடைத்து பொதுமக்கள் சாலை மறியல்.


வாணியம்பாடி அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் பானுமதி தம்பதியினரின் மகன் தரணி 3 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் இன்று தனது பெற்றோருடன் வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.


அப்பொழுது தரணி  சாலையை கடக்க முயன்றபோது திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி அதிவேக வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து சாலையை கடக்க முயன்ற மாணவன் மீது மோதியுள்ளது,


இதில் மாணவன் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் மாணவனை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கலந்திரா பகுதியில் மாணவன் மீது மோதிய தனியார் பேருந்தை சிறை பிடித்து பேருந்தின் கண்ணாடியை உடைத்து பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.


உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் சாலைமறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


இந்நிகழ்வால் கலந்திரா பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிய நிலையில்,  அப்பகுதியில் சுமார், ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/