அங்கன்வாடி மையம் கட்டுமான பணி ஆய்வு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 January 2023

அங்கன்வாடி மையம் கட்டுமான பணி ஆய்வு.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை ஊராட்சி கொட்டையூரில் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி மையம் கட்டுமான பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை திரு.தென்காசி. எஸ்.ஜவஹர்.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். 


உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.ஜெயகுமார், மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் திருமதி.இராஜஸ்ரீ, வட்டாட்சியர் திரு.சிவப்பிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.தினகரன் திரு.முருகேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.

- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/