தமிழக முழுவதும் நாளை அதிகாலையில் வெளிவர இருக்கும் வாரிசு திரைப்படத்திற்கு, திருப்பத்தூர் திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள சி கே சி திரையரங்கத்தில் விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் பேனர் வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் கெளதம் பேட்டையைசேர்ந்த இளைஞர் வசந்த் என்பவர் வைத்திருந்த பேனர் வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் கார் மீது படுத்து கொண்டு டீ கிளாஸ் கையில் பிடித்துக் கொண்டு இருப்பதை போல் அப்படியே விஜய் ரசிகன் போட்டோ சூட் எடுத்து விஜய் போலவே பேனர் வைத்துள்ளார்.
இதனால் அப்பகுதியில் நடிகர் விஜய்க்கு டப் கொடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, பின்னர் நடிகர் விஜய் மற்றும் அஜித் கட்டி பிடிப்பது போல் பேனர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment