அதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமேலேரிமுத்தூர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் தொகுப்பு வழங்க காலை 10.30 மணிக்கு அளவில் நடைபெற இருந்தது.

ஆனால் சில காரணங்களால் மதியம் 2 மணி அளவில் பொங்கல் தொகுப்பு வழங்க சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சிஎன் அண்ணாதுரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பொதுமக்களிடம் உங்களை அதிக நேரம் காக்க வைத்ததற்கு முதலில் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறி பொங்கல் தொகுப்பு வழங்க ஆரம்பித்தார். இச்சம்பவம் பொதுமக்களின் பாராட்டுதல்களை பெற்றது மேலும் சுமார் 50 பயனாளிகளுக்கு எம்பி பொங்கல் தொகுப்பு வழங்கினார்.
எம்பி அங்கிருந்து சென்ற பின் சுமார் 1500 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment