தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து குடும்பங்களும் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.
அதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சின்ன கடை தெரு பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவரும் திருப்பத்தூர் திமுக நகர செயலாளர் எஸ். ராஜேந்திரன் அப்பகுதி மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், திமுக திருப்பத்தூர் மாவட்ட பொருளாளர் ஜோதி ராஜன், திருப்பத்தூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகுநாத், 20வது வார்டு கவுன்சிலர் ரேவதிபாலாஜி, டி.பி.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை.

No comments:
Post a Comment