திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36ஆவது வார்டு திருமால் நகர் பகுதியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட செயலாளர் இரா.சுபாஷ்சந்திரபோஸ் முன்னிலையில் கவுன்சிலர் வெற்றிகொண்டான் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வெள்ளை மற்றும் கருப்பின வேற்றுமை உள்ளது.
இந்தியாவில் அதுபோல இன வேற்றுமை இல்லை எனவும் ஒரு மனிதன் சிறந்த கல்வி பெறுவதனாலே மாற்றத்தை உருவாக்க முடியும்,தனி மனித வளர்ச்சி மட்டும் அல்லாமல் சமுதாயம் வளர்ச்சி அடைய கல்வியால் மட்டுமே முடியும், எனவே கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைவரும் படிக்க வேண்டும் அறிவுறித்தினார்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை
No comments:
Post a Comment