வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் பலி. 2 பேர் படுகாயம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 12 February 2023

வாணியம்பாடி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் பலி. 2 பேர் படுகாயம்.


திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே  ஈச்சங்கால் பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் புத்துக்கோயில் பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் அவருடைய 8 வயது மகன் தயாமூர்த்தி என்பவருடன் கடைக்கு சென்று கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.  

இந்த நிலையில் ஆம்பூர் அடுத்த ரங்கபுரம் பகுதியை சேர்ந்த ராமன்(35) மற்றும் அவரது மாமனார் மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் (57) ஆகியோர் பட்டாசுகளை வாங்க கடைக்கு வந்துள்ளனர்.  அப்போது எதிர்பாராத விதமாக கடைக்குள் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.


பட்டாசுகள் ஒரே நேரத்தில் வெடித்ததால் அதில் கடை உரிமையாளர் குமார் (45) அவருடைய மகன் தயாமூர்த்தி(8) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.  மேலும் படுகாயம் அடைந்த பட்டாசு வாங்க வந்த வேலாயுதம், ராமன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.


இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்ததின் பேரில் விரைந்து சென்ற வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கடைக்குள் இருந்த பட்டாசுகள் முழுவதும் எரிந்து சாம்பல் ஆகிவிட்டது.


படுகாயமடைந்த  2 பேரை பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் அறிந்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன், நகர காவல் ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.


சம்பவம் குறித்து அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/