திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கொத்தூர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் நாட்றம்பள்ளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக எல்லையை கடக்கும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை பகுதியில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு மாருதி காரில் தப்பி சென்றதாக கூறப்படும் நிலையில் அனைத்து கார்களையும் சோதனை செய்து வருகின்றனர். ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment