திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சின்னாரம்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வீடு கட்டுமான பணியை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் டாக்டர்.மணிஷ் நாரணவரே.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப. ஊரக வளர்ச்சித் துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வி.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.செல்வராசு, உதவி இயக்குனர் ஊராட்சிகள் திருமதி.விஜயகுமாரி, உதவி செயற்பொறியாளர் திரு.மகேஷ் குமார், உதவி திட்ட அலுவலர் திருமதி.ஆப்தா பேகம், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.துரை மற்றும் பலர் உள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை


No comments:
Post a Comment