திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பூமி அறக்கட்டளை ஆகியோர் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி உள்ளரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் டி. முஹம்மத் இலியாஸ் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளரும் தாளாளருமான எல் எம் முனீர் அஹமத் முன்னிலை வகித்தார். பேராசிரியர் முனைவர் முஜீபுர் ரஹ்மான் ரஹமான் அனைவரையும் வரவேற்றார். வாணியம்பாடி முஸ்லிம் கல்விச்சங்கம் இணைச் செயலாளர் நரி. முஹம்மத் நயீம், கல்லூரி உயிர் வேதியல் துறை தலைவர் லியாகத் அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் என்.பி.எம் முஹம்மத் தாரிக் நோக்கரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆராய்ச்சியாளர் ஞான சூரிய பகவான், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் வெ. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மஞ்சப்பைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் ஹரிஹரன், முஹம்மது அலி, திருப்பதி, தாஹிர் ஹுசேன், அஸ்கர் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் என ஏராளமானவர் கலந்து கொண்டனர். முடிவில் தேசிய மாணவர் படை முனைவர் எஸ்.என்.முஹம்மத் அசாருதீன் நன்றி கூறினார்.
முன்னதாக பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேதாஜி நகர் பகுதியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் இருந்து கல்லூரி வளாகம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் மாரத்தான் நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் டி.முஹம்மத் இலியாஸ் தலைமை வகித்தார். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் வெ.கோபாலகிருஷ்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா கலந்து பேரணியை கொடியாசித்து தொடங்கி வைத்தார். பேரணி கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதி வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. பேரணியின் போது மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், மஞ்சப்பை மீண்டும் பயன்படுத்த வலியுறுத்தி வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பி வாறு பேரணியாக சென்றனர். பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியரகள் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment