திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி முருக்கன்குட்டை பகுதியை சேர்ந்தவர் ராணி (43). இவருக்கு அதே பகுதியில் மூன்று ஏக்கர் விவசாய நிலம் உள்ள நிலையில் அவரது கணவர் மற்றும் மகன்கள் பெங்களூரில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருவதால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராணியும் பெங்களூர் சென்று அங்கேயே தங்கி உள்ளார். இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த உறவினரான பிரகாஷ் என்பவர் வீட்டின் அருகில் உள்ள ராணிக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தபோது ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இது குறித்து கிராமிய போலீசார் பிரகாஷ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ராணியின் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த பிரகாஷ் நிலத்தை அபகரிக்க முயற்சித்து ராணிக்கு சொந்தமான நிலத்தில் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு பள்ளம் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ராணி மற்றும் பிரகாஷ் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது.இதில் பிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியதில் ராணி மற்றும் அவரது மாமியார் காமாட்சி படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் முயற்சி கட்சிக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:
Post a Comment