திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அருங்கல் துர்கம் கிராமத்தை சேர்ந்த சிங்காரம். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் விவசாய நிலத்தில் அமைந்துள்ள பாழடைந்த கிணற்றில் இரண்டு கரடி குட்டிகள் தவறி விழுந்துள்ளது. கரடிகளின் அலறல் சத்தம் கேட்ட பகுதி மக்கள் உடனடியாக ஆம்பூர் வனத்துறையினருக்கும், தீயணைப்புத் தலைவருக்கும் தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் கிராம மக்கள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் கிணற்றின் பக்கவாட்டு சுவர்களை அகலப்படுத்தி சுமார் 5 மணி நேரம் போராடி கரடி குட்டிகளை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட கரடி அருகில் உள்ள வனப்பகுதியை நோக்கி ஓடிச் சென்றது.
கரடி குட்டிகள் விவசாயி கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment