விளாங்குப்பம் பகுதி மலைவாழ் மக்களின் பங்களிப்பாக "நமக்கு நாமே திட்டத்தில்" சமுதாயக்கூடம் அமைத்திட ரூபாய் 6 லட்சத்திற்கான வரைவு காசோலை வழங்கினார் MLA. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 March 2023

விளாங்குப்பம் பகுதி மலைவாழ் மக்களின் பங்களிப்பாக "நமக்கு நாமே திட்டத்தில்" சமுதாயக்கூடம் அமைத்திட ரூபாய் 6 லட்சத்திற்கான வரைவு காசோலை வழங்கினார் MLA.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலை புதூர்நாடு ஊராட்சி, விளாங்குப்பம் பகுதி மலைவாழ் மக்களின் பங்களிப்பாக "நமக்கு நாமே திட்டத்தில்" சமுதாயக்கூடம் அமைத்திட ரூபாய் 6 லட்சத்திற்கான வரைவு காசோலையை (DD) திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி MLA, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் D  பாஸ்கரபாண்டியன் இ ஆ ப அவர்களிடம் அளித்தார்கள். 

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியின் நேர்முக உதவியாளர் வில்சன்‌ ராஜசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மற்றும் கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜியா அருணாச்சலம், மற்றும் விலங்குப்பம் பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் ஆகியோர் ‌உடன்  இருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/