திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி, கந்திலி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட நார்சம்பட்டி ஊராட்சி, பூங்காவனத்தம்மன் கோவில் வட்டம் பகுதியில் ஜல் ஜீவன் மிஷின்(JJM) திட்டத்தின் மூலம் சுமார் 38 லட்சம் மதிப்பீட்டில் அனைவருக்குமான சமச்சீர் குழாய் அமைக்கும் திட்டத்தை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு A நல்லதம்பி MLA அவர்கள் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் கு ராஜமாணிக்கம், கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் கே முருகேசன், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத்தலைவர் ஜி மோகன் குமார், ஒன்றிய அவைத் தலைவர் ஆனந்தன், ஒன்றிய பொருளாளர் கோடீஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா ஸ்ரீனிவாசன், மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment