திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரப் பகுதியில் சுமார் 36 வார்டுகள் அமைந்துள்ளது. இதில் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு ஹாஜ் மியான் தெரு, குலாம் ரசூல் தெரு, வரதராஜ பெருமாள் கோயில் தெரு , உள்ளிட்ட தெருகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன எனவே அப்பகுதியில் மக்கள் கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் சரிவர சுத்தப்படுத்துவதில்லை எனவும் இதனால் நோய் தொற்று அபாயமும் பல்வேறு நோய்கள் உருவாகின்றன எனவே சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இதுவரை நகராட்சி கமிஷனர் ஜெயராமராஜா எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து நகராட்சி நிர்வாக அதிகாரிகளை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
மேடம் இச்சம்பவம் அறிந்து வந்த திருப்பத்தூர் நகர போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இருப்பினும் சமாதானம் ஆகாத பகுதி மக்கள் நகராட்சி துப்புரவு அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து குப்பைகளை அகற்றியதின் காரணமாக அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment