ராச்சமங்கலம் பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 March 2023

ராச்சமங்கலம் பகுதியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ராச்சமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.


திருவிழாவின் கரிகோல ஊர்வலம்,  பம்பை மேளத்துடன் திருவீதி உலா, ஸ்ரீ விநாயகர் பூஜை, எஜமானர் சங்கல்பம், கோபுரத்தில் தானியம் நிரப்புதல், பிரம்சுத்தி கோபுர கலசம் வைத்தல், உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடைபெற்றது.


மேலும் சுற்றுவட்டார பகுதிகள் பால்குடம் மற்றும் கலசங்கள் வைத்து யாககால  கணபதி பூஜையுடன்  மேல தாலங்களுடன் மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோபுரத்தின் மேலே உள்ள கலசத்தின் மீது மீது புனித நீர் ஊற்றி பின்னர்  பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது


இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற முழக்கத்துடன் அம்மனை வழிபட்டனர் நிகழ்ச்சியில் 2000க்கும்  மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.


- மாவட்ட செய்தியாளர் அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/