வக்பு வாரிய சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு; தமிழக - ஆந்திர சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்கள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 March 2023

வக்பு வாரிய சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு; தமிழக - ஆந்திர சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்கள்.


வாணியம்பாடி அருகே வக்பு வாரிய சொந்தமான இடம் என்று சொல்லி பல ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்தை விற்பனை செய்யவிடமால்  தடுப்பதாகவும்  மற்றும் புதிய மின் இணைப்பு வாங்க முடியாமல் தவிப்பதாக  பொது மக்கள் அவதிபடுவதாக  குற்றச்சாட்டி பள்ளி வாசல் மற்றும் வக்பு வாரியத்திற்கு எதிராக தமிழக - ஆந்திர சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்கள்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் ஜாப்ராபாத் பகுதியில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இந்நிலையில் பல ஆண்டுகளாக மக்கள் வசித்து வரும் இப்பகுதியில்  சுமார் 5  ஏக்கருக்கு மேல் உள்ள  இடத்தை அப்பகுதிமக்கள் சிலர் விற்க முயற்சித்த போது அந்த இடம் வக்பு வாரிய கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிவாசலுக்கு சொந்தமானது என அதிகாரிகள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகம் மக்களிடம்  தெரிவித்துள்ளனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள  பொதுமக்கள் தங்களது இடத்தை  விற்பனை செய்ய முடியாமலும் புதிதாக வீடு கட்டினால் அதற்கு மின் இணைப்பு வாங்க முடியாமலும் அவதிப்பட்டு வருதாகவும், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி   வாணியம்பாடி - ஆந்திரா செல்லும் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் விரைந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி  இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டதால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்க்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/