திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், திருப்பத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் நகரம் சிவராஜ் பேட்டை மற்றும் கந்திலி ஒன்றியம் நத்தம் நரவந்தபட்டி ஆகிய பகுதிகளில் 110KVA மற்றும் 33/11KVA துணை மின்நிலையம் அமைத்திட அரசிடம் கோரிக்கை வைத்தார்.
கோரிக்கையை ஏற்ற, மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் திரு வே செந்தில் பாலாஜி திருப்பத்தூர் பகுதியில் சிவராஜ் பேட்டை மற்றும் நத்தம் நரவந்தபட்டி ஆகிய பகுதிகளில் துணைமின் நிலையம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment