திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், கட்டேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி MLA அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்து சிறப்பித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.தாமோதிரன், மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா, மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment