திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியில் உள்ள நந்தினி திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் தவறவிட்ட செல்போன்களை அந்தந்த காவல் நிலையங்களுக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட சைபர் செல் பிரிவில் மேல் நடவடிக்கைக்காக அனுப்பி இருந்த புகாரின் பேரில் துரிதமாக செயல்பட்டு 40 லட்சத்தி 80 ஆயிரம் மதிப்பிலான 170 செல்போன்களை மீட்டனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் 170 செல்போன்களை உரியவர்களிடம் இன்று ஒப்படைத்தார். மேலும் தமிழக முழுவதும் எந்த மாவட்டங்களில் செயல்படாத வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தை பொருத்த வரையில் கடந்த மூன்று ஆண்டுகளில் 433 செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் துரிதமாக செயல்பட்ட இரண்டு போலீசாருக்கு ஊக்கத்தொகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை.

No comments:
Post a Comment