ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் எண்ணும் எழுத்தும் திருவிழா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 March 2023

ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் எண்ணும் எழுத்தும் திருவிழா.


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் எண்ணும் எழுத்தும் ஓராண்டு நிறைவை முன்னிட்டு பெற்றோர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் மாணவர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் நல்லாசிரியர் இந்திரா எண்ணும் எழுத்தும் திட்டத்தின் சிறப்பம்சங்களை எடுத்துக் கூறினார். இக் கொண்டாட்டத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோவில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் அடங்கிய வாசகமும், ஆட்டோ முழுவதும் அதற்கான துணைக் கருவிகளை கொண்டு அலங்காரப்படுத்தியும் பள்ளியிலிருந்து ராஜாவூர் தெருக்கள் முழுவதும் ஊர்வலமாக சென்றனர். 

பெற்றோர்களை மாணவர்கள் மலர்தூவி வரவேற்றனர். நுழைவு வாயிலில் அகல் விளக்கு ஏற்றி எழுதப்பட்ட எண்ணும் எழுத்தும் வாசகம் அனைவரையும் மிகவும் கவர்ந்தது. வகுப்பறை முழுவதும் புதிய புதிய வண்ண வண்ண கற்றல் உபகரணங்களும், துணை கருவிகளும் அமைத்து அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பெற்றோர்கள் வகுப்பறையை பார்த்து வியந்தனர். மாணவர்களின் தனித்திறமைகள் பெற்றோர்களுக்கு பொம்மலாட்டம், பாடல் ,தனி நடிப்பு, குழு நடிப்பு மூலம் விளக்கினர். புத்தகங்களை பெற்றோர்கள் முன்னிலையில் படித்துக் காட்டினர். கரும்பலகையில் உள்ளதையும் வாசித்துக் காட்டினர். 


பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இணைந்து போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்கு கிரீடம் சூட்டி பரிசு கொடுக்கப்பட்டது. இதைப் பார்த்த பெற்றோர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தேநீர், பிஸ்கட், இனிப்புகள் வழங்கப்பட்டது. இக் கொண்டாட்டத்தில் தற்காலிக ஆசிரியர்  சரளா, சத்துணவு ஊழியர் அருள்மொழி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுபா, வார்டு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பெரும் மகிழ்ச்சி கொண்டனர். இறுதியாக உதவி ஆசிரியை  உமாராணி நன்றி கூறினார். விழா இனிதே முடிந்தது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/