அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்கள் வருவதை பார்த்து கொள்ளளயில் ஈடுப்பட்ட மர்ம நபர் கடப்பாரையை அங்கேயே விட்டு தப்பியோடியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆலங்காயம் போலீசார் விரைந்து சென்று சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.

சம்பவம் குறித்து ஏ.டி.எம் முகவர் செல்வன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:- நேற்று மாலை ஏ.டி.எம் இயந்திரத்தில் ரூபாய் 1.25 லட்சம் இருப்பு இருந்த நிலையில் மீண்டும் அதில் ரூபாய் 3 லட்சம் நிரப்பப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு கொள்ளை முயற்சி நடைபெற்று உள்ளது. ஆனாலும் இயந்திரத்தின் லாக் தரமாக இருந்த காரணத்தினால் கொள்ளையன் ஏ.டி.எம்மில் இருந்த பணத்தை எடுக்க முடியவில்லை. ஆகையால் அதிலிருந்து 4.25 லட்சம் ரூபாய் பத்திரமாக உள்ளது என்ன பேட்டி அளித்தார்.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் முஜம்மில்

No comments:
Post a Comment