திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு சார்பில் ராகுல் காந்தி எம்பி பதவி நீக்கிய மத்திய மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் சபி தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசை பற்றி விமர்சனம் செய்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில சிறுபான்மை தலைவர் அஸ்லாம்பாஷா பேசுகையில் இந்த அரசு மொழி ஜாதி, மதம் இனம் என ஆர் எஸ் எஸ் பிடியில் இந்த இந்தியாவை அடமான வைக்கும் வேலையை மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது.

நாட்டில் வேலையின்மை பொருளாதார வீழ்ச்சி என அனைத்திலும் மோடி அரசு தோல்வி கண்டு இருக்கிறது. மோடி அவர்கள் பொய்யை மட்டுமே பரப்பி வருகிறார். 2024 இல் ராகுல் காந்தி பிரதமர் ஆக பதவி ஏற்க போகிறார். கேள்வி கேட்பவர்களை பதவி நீக்கம் செய்வது வெட்ககேடானது மீண்டும் நாடாளுமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெறுவார் என்றார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment