இந்த ஆய்விற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப., முன்னிலை வகித்தார்கள். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் புதூர்நாடு மலை கிராமத்தில் 32 கிராமங்களில் 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கைகள் வசதி கொண்ட சுகாதார நிலையம் ஆகும் ஒரு மாதத்திற்கு 30 பிரசவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு மையம் ஒன்று உருவாக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்த பிரத்தியாக பச்சிளம் குழந்தைகள் பராமரிப்/பு மையம் அகில இந்திய அளவில் பழங்குடியினர் மக்கள் நலனுக்காக மலைப்பகுதியில் உருவாக்கப்படும் முதல் மையமாகும். இம்மையத்தில் ஒரே சமயத்தில் 10 பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு பராமரிப்பு அளிக்க இயலும். இனிவரும் காலங்களில் இந்த மலைப் பிரதேசத்தில் இருந்து பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆய்வுகளின் போது வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இலட்சுமி, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு.செந்தில், வட்டாட்சியர் திரு.சிவப்பிரகாசம், அரசு மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment