திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடியில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக 1,00,000 ரூபாயும் இரண்டாவது பரிசாக 75,000 ரூபாயும் மூன்றாவது பரிசாக 65,000 ரூபாய் என மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டன.

மாவட்டகுழு தலைவர் சூரியகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த எருது விடும் திருவிழாவில் சுமார் 10000க்கும் மேற்பட்ட காளையர்கள் பங்கேற்றனர், இந்த எருது விடும் திருவிழா வருவாய் துறை அதிகாரிகளின் முறையான அனுமதியுடன் தீயணைப்பு துறை மருத்துவ துறை உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் நடைபெற்றது.
மேலும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment