திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 76 வீடுகள் கட்டுமான பணிகள், மின்னூர் ஊராட்சி சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 160 வீடுகள் கட்டுமான பணிகள் ஆகியவை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது 76 வீடுகள் கட்டுமான பணிகளை வேலையாட்களை அதிகப்படுத்தி பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும், இப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை அலுவலருக்கு ஆணையிட்டுள்ளார்.


No comments:
Post a Comment