
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போக்குவரத்து போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அவரை விரட்டி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ராம குண்டா பகுதியை சேர்ந்த ஜெயபால் மற்றும் ராஜா தோப்பு பகுதியை சேர்ந்த சிவா என்பதும், திருத்தணியில் இருந்து இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்த போது கண்டிகை பகுதியில் சாலையில் அடிபட்டு கிடந்த மானை மீட்டு அங்குள்ள வனப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மான் தோலை உரித்து வீசிவிட்டு மான் கறியை மூட்டை கட்டி கடத்தி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
சம்பவம் தொடர்பாக ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வன அலுவலர் சங்கரய்யா தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று மான் கறியை கடத்தி வந்த இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 20 கிலோ மான் கறி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment