திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த இராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக பல்வேறு சாதனைகளை பயின்று வருகிறது.

மேலும் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் ஒவ்வொரு திறமையும் தனித்துவம் பெற்று விளங்கி வருகின்றனர் இதற்கு முழு காரணம் பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் விருது பெற்ற இந்திரா ஆசிரியர் ஆவார். இந்த நிலையில் ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவிகள் வேதிகா மற்றும் ஷிவானி இருவரும் விஜயின் ரஞ்சிதமே பாடலை டப் செய்து கொரோனாவே ஓடிவிடு தடுப்பூசி போட்டு விட்டோம், புதிதாக வந்த கொரோனாவே தமிழ்நாட்டை விட்டு ஓடிவிடு, தமிழ்நாட்டை முதல்வர் முக ஸ்டாலின் காப்பாற்றுவார், என பாடி அசத்தினர்.
மேலும் சுத்தமாக கை கழுவ வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் சத்து வாய்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்டசெய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment