வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையின் கதவில் இந்த டாக்டரால் இழந்த உயிர்கள் என இறந்தவர்களின் பெயரை பட்டியலிட்டு ஒட்டுப்பட்ட போஸ்டரால் பரபரப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 April 2023

வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையின் கதவில் இந்த டாக்டரால் இழந்த உயிர்கள் என இறந்தவர்களின் பெயரை பட்டியலிட்டு ஒட்டுப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி  நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் குமார் இவர் தனது தாய் இந்திராணி என்பவரை கடந்த டிசம்பர் மாதம்  வாணியம்பாடியில் உள்ள பி.ஜே.நேருசாலையில் அமைந்துள்ள தனியார் பல் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அங்கு இந்திராணியிற்கு பல் மருத்துவர் அறிவரசன் என்பவர் பல் பிடுங்கியதாக  கூறப்படுகிறது, பல் பிடுங்கியதை தொடர்ந்து இந்தராணியிற்கு தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் இந்திராணி உயிரிழந்துள்ளார்.


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்ரீராம் குமார் தனது தாயிற்கு பல் சிகிச்சை அளித்த பல் மருத்துவர் அறிவரசனிடம்  வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு, தனது தாய் பல் மருத்துவரின்  தவறான சிகிச்சையால் உயிரிழந்தாக கூறி பல் மருத்துவர் அறிவரசன் மீது  இதுகுறித்து ஸ்ரீராம் குமார் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் காவல்துறையினர் இப்புகார் குறித்து  மருத்துவதுறையினருக்கு பரிந்துரைதுள்ளனர், இதனை தொடர்ந்து மருத்துவதுறையினர் வருகின்ற மே 4 ஆம் தேதி பல் மருத்துவமனையின் மருத்துவரிடம் விசாரணை மேற்க்கொள்ள உள்ளனர். இந்நிலையில் பல் மருத்துவமனையின் முன் கருப்பு மையை ஊற்றியும், மருத்துவமனையின் கதவில்   இந்த டாக்டரால் இழந்த உயிர்கள் என 9 பேரின் பெயர்களை எழுதி அவர்கள் எப்படி இறந்தார்கள் என எழுதி போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.


இதனை தொடர்ந்து போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரம் குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் போஸ்டர் ஒட்டியவர் குறித்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும்  பல் மருத்துவமனை கதவின் முன் இந்த டாக்டரால்  இழந்த உயிர்கள் என இறந்தவர்களின் பெயருடன் ஒட்டப்பட்ட போஸ்டர்  வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/