சுதாவிற்கு சொந்தமான கழிவறை மற்றும் வீடு கட்டுவதற்காக போடப்பட்ட வீட்டின் அடித்தளத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தட்டி கேட்ட சுதாவை அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சேர்ந்து அருணாச்சலம் என்பவர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த சுதா திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் சேர்மன் கணவர் அருணாச்சலத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய சுதா ஆளுங்கட்சி துணை இருப்பதால் எங்களை அடிக்கடி தொந்தரவு செய்வதாகவும் நாங்கள் வேற்று சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் எங்களை அடிக்கடி துன்புறுத்துவதாகவும் தெரிவித்தனர் அவர்கள் மீது ஏற்கனவே முதல்வரின் தனி பிரிவுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் புகார் கொடுத்திருப்பதாகவும் ஆனால் அந்த புகாரின் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார் என்னையும் எனது கணவர் மற்றும் குழந்தைகளையும் தொடர்ந்து தாக்கி வரும் திருப்பத்தூர் சேர்மனின் கணவர் அருணாச்சலம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
.jpg)
No comments:
Post a Comment