திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி ஊராட்சியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் முதன் முறையாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நீடித்த நிலையான பருத்தி சாகுபடி இயக்கம் சார்பில் டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்.
மேலும் இதுபோல் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட வேண்டுமென்றால் அந்தந்த வட்டார பகுதிகளில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அனுகி பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகள் பயன்படும் வகையில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு 600 ரூபாய் செலவில் விவசாயிகள் பயன் அடையலாம் என்று வலியுறுத்தினார்.

மேலும் செவ்வாத்தூர் ஊராட்சி பகுதியில் விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு மூலம் சொட்டு நீர் பாசனம் மூலம் மா தோட்ட பயிரை ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிக்ச்சியில் இணை இயக்குனர் பாலா துணை இயக்குனர் பச்சையப்பன் வேளாண்மை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், கந்திலி வட்டார வேளாண்மை இணை இயக்குனர் ராகினி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment