திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த மாங் குப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ பொன்னியம்மன் மற்றும் நவகிரக ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை மங்கல இசை விநாயகர் பூஜை இரண்டாம் கால யாக பூஜைகள் பஞ்ச சுக்த பாராயணம் மகாலட்சுமி ஓமம் திரவிய ஹீதி, நாடி சந்தானம் மகாதீபாராதனை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து யாத்ரா தானம் திரவ கலசங்கள் புறப்பாடு ஆலய கோபுர கலச கும்பாபிஷேகம் தொடர்ந்து மூலவர் பரிவாத தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அலங்காரம் கோதரி தரிசனம் தசதானம் மகாதீபாராதனை பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் அதிவிமரிசையாக ஊர் கவுண்டர் ஏசுநாதன் ஊர் நாட்டாமை சாமி கண்ணு கோர்க்காரர் சங்கர் முன்னிலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பூஜைகள் நடைபெற்று குடங்களில் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பொதுமக்கள் அனைவரின் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. அனைவரும் கோவிந்தா கோவிந்தா என்று கோசம் எழுப்பினர், பொதுமக்கள் சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment