கந்திலி அருகே சக்தி புறத்தில் பிரசித்தி பெற்ற133 அடி உயரம் கொண்ட சாந்தரூப ஸ்ரீ வெக்காளியம்மன் நடு பழனி சித்தர் பீடத்தில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான மக்கள் பங்கேற்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 April 2023

கந்திலி அருகே சக்தி புறத்தில் பிரசித்தி பெற்ற133 அடி உயரம் கொண்ட சாந்தரூப ஸ்ரீ வெக்காளியம்மன் நடு பழனி சித்தர் பீடத்தில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான மக்கள் பங்கேற்பு.


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சக்தி புரத்தில் நடு பழனி சித்தர் பீடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற 133 அடி உயரம் கொண்ட ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, இந்த கோயில் பிரகாரத்தில் ஸ்ரீ பிரித்திங்கரா தேவி விநாயகர் சித்தர்கள் பீடங்கள்  பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில்இந்த விழாவில் விநாயகர் பூஜை  மங்கள இசை திருப்பள்ளி எழுச்சி, தாய் வீட்டார் தட்டு வரிசை கொண்டு வருதல் அதை தொடர்ந்து தாயார் சங்கல்பம்,விஷேச ஹோமங்கல், விஸ்வரூப தரிசனம், மங்களார்த்தி தீபாராதனை, சந்தனம் சுவாமிக்கு உயிர் ஊட்டும் நிகழ்ச்சி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.யாககால  கணபதி பூஜையுடன்  மேல தாலங்களுடன் மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோபுரத்தின் மேலே உள்ள கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி பின்னர்  பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது.


இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஓம் காளி ஜெய காளி என்ற முழக்கத்துடன் அம்மனை வழிபட்டனர் நிகழ்ச்சியில் 1000க்கும்  மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். 


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/