தகப்பனாரின் நினைவு நாளில் ஆயிரம் பேருக்கு கறி விருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய மகன்கள்- நாட்றம்பள்ளி அருகே ருசிகரம் - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 17 April 2023

தகப்பனாரின் நினைவு நாளில் ஆயிரம் பேருக்கு கறி விருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய மகன்கள்- நாட்றம்பள்ளி அருகே ருசிகரம்


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா, கொத்தூர் காந்திநகர் பகுதியில் சேர்ந்தவர் நீலகண்டன். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். ஒரு மகன் பெங்களூரிலும் மற்றும் மற்றும் இரு மகன்கள் அமெரிக்காவில் வேலை செய்து வருகின்றனர். இன்று மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தில் பொதுமக்களுக்கு கறி விருந்து மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். 

இந்த விழாவில் கலந்துக் கொண்ட  பள்ளி குழந்தைகள் தாங்கள் தாத்தாவுடன் எப்போதும் கலகலப்புடன் இருந்ததாகவும் தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதேபோல் இந்த விழாவிற்கு  வந்திருந்த நீலகண்டனின்  நண்பர்களும் அவருடைய பழைய  நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். உதவி என்று வருபவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் உதவி செய்து வந்ததாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தனர். அனைவருக்கும் கருவிருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். கலந்துக்கொண்ட அனைவருக்கும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/