கனவாக இருந்த பள்ளி ஆண்டு விழாவை தன்னுடைய சொந்த முயற்சியால் நடத்தி காட்டி வரவேற்பை பெற்ற பாஜக வார்டு கவுன்சிலர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 April 2023

கனவாக இருந்த பள்ளி ஆண்டு விழாவை தன்னுடைய சொந்த முயற்சியால் நடத்தி காட்டி வரவேற்பை பெற்ற பாஜக வார்டு கவுன்சிலர்.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு அதிபெரமனூர் பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் பல ஆண்டுகளாக நோய் தொற்று காரணமாகவும் நிதி பிரச்சனை காரணமாகவும் அரசு நடுநிலை பள்ளி ஆண்டு விழா நடைபெறாமல் இருந்துள்ளது.

இதனை அறிந்த 14 வது வார்டு பாஜக கவுன்சிலர் குரு சேவ் பள்ளி குழந்தைகளின் தனித் திறமைகளையும் பன்முகத் தன்மையையும் வெளிக்கொண்டு வரும் விதமாக தன்னுடைய சொந்த முயற்சியால் சுமார் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழாவை நடத்திக் காட்டிய சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



இந்த ஆண்டு விழாவில் பள்ளி குழந்தைகள் நடனம் மாறுவேட போட்டி தேசிய தலைவர்களின் வரலாறு சம்பந்தமான பேச்சுப்போட்டி நாடகம் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை செய்து காட்டி அசத்தினர்.


மேலும் இந்நிகழ்ச்சியில் கல்விக் குழு உறுப்பினரும் 14வது வார்டு பாஜக கவுன்சிலருமான குருசேவ் வட்டார கல்வி அலுவலர் கோமதி தலைமை ஆசிரியர் தேன்மொழி எஸ் எம் சி தலைவர்கள் மற்றும் பிடிஏ தலைவர்கள் முன்னாள் தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் மற்றும் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியின் முடிவில் சுமார் 500 பேருக்கு 14வது வார்டு கவுன்சிலர் குரு சேவின் சொந்த செலவில் மதியம் அசைவ உணவு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வார்டு கவுன்சிலர் குரு சேவ் நன்கொடையாக பெறப்பட்ட சுமார் 20 ஆயிரம் ரூபாய் போக மீதம் உள்ள சுமார் 60 ஆயிரம் ரூபாயை தன்னுடைய சொந்த பணத்தை செலவிட்டு பள்ளி குழந்தைகளின் கனவாக இருந்த ஆண்டு விழாவை நனவாக மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 - மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/