மக்களை தேடி மாவட்ட ஆட்சியர் திட்டத்தின் கீழ் கல்லாவூர் மலைவாழ் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 April 2023

மக்களை தேடி மாவட்ட ஆட்சியர் திட்டத்தின் கீழ் கல்லாவூர் மலைவாழ் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்.


திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மக்களை தேடி மாவட்ட ஆட்சியர் என்ற திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை கல்லாவூரில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று குடிநீர் வசதி, சாலை வசதி, சாதி சான்றிதழ், மாடு, ஆடு கடன் வேண்டி மனுகள் உள்ளிட்ட பல்வேறு 144 கோரிக்கை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்து உடனடியாக மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் புதூர் நடு மலை ஊராட்சியில் வருவாய் அலுவலகத்தில் பல்வேறு துறைகள் சார்பில் முகம் நடத்தப்பட்டு மலைவாழ் மக்களிடம் இருந்து ஜாதி சான்றிதழ், வீட்டுமனை பட்டா, முதல்வர் காப்பீடு அட்டை, மாற்றுத்திறனாளி அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, முதியோர் உதவி தொகை, மின் இணைப்பு, குடும்ப அட்டை, உள்ளிட்ட 730 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பெற்றுக்கொண்டார்.


மேலும் இதை தவிர்த்து மலைவாழ் மக்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்குதோ எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்தால் அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் மேலும் இது போன்ற வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு மலைவாழ் மக்கள் அனைவரும் தங்களின் வாழ்வில் வளர்ச்சியடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன்   தெரிவித்தார்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/