அனுமம்பட்டியில் பகுதி நேர நியாய விலை கடையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 April 2023

அனுமம்பட்டியில் பகுதி நேர நியாய விலை கடையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கந்திலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளத்தூர் முழு நேர நியாய விலை கடையை பிரித்து அனுமம்பட்டி கிராமத்தில் பகுதி நேர நியாய விலைக் கடையை இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்  திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பேசுகையில்  இந்த பகுதி நேர கடை வேண்டும் என்று 25 ஆண்டுகால கோரிக்கையாக இருந்தது.  இந்த கோரிக்கையானது முதல்வரின் உத்திரவின் பேரில் தற்போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே பகுதி நேர நியாயவிலை கடைகளை திறக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார். 


அதன் அடிப்படையில் இந்த கடை துவங்கப்பட்டுள்ளது. இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் விழாவில் சிறப்பு அழைப்பாளராக கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் துணைத் தலைவர் மோகன் குமார் கூட்டுறவு சார் பதிவாளர் சதாசிவம் மற்றும் ஊர் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/